பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..!

தை பொங்கல் திருநாள் தமிழ்நாட்டில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளில் நாம் பயிர்கள் செழிக்க உழவு செழிக்க உதவிய சூரியனுக்கும் இயற்கைக்கு நன்றி கூற வேண்டும்.

நல்ல நேரத்தில் பொங்கல் வைப்பதால் செல்வ வளம் அதிகரிக்கும்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நான்கு நாட்கள் களைகட்டும். விளைச்சலுக்கும், உழவுத் தொழிலுக்குத் தேவையான உதவிகளை செய்யும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக, நன்றி தெரிவிக்கும் விதமாகவும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

நல்ல நேரம்: இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஆம் தேதி திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காலை 06.30 முதல் 07.30 வரை பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கலாம் என பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் வைப்பவர்கள் வீட்டின் நடு கூடத்திலோ, வெளியிலோ அழகான கோலமிட்டு புது அடுப்பு வைத்து புது மண்பானையை அலங்கரித்து கோலமிட்டு கழுத்தில் இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து கட்டி அடுப்பு மூட்டி புதுப்பானையில் புது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய் போட்டு சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள்.

பானையில் பொங்கல் பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாக குரல் எழுப்பி வணங்குவார்கள். பொங்கல் சமைத்த உடன் நம் வளர்ச்சிக்கு காரணமான இயற்கைக்கும், இந்திரன், சூரியன், உபேந்திரனுக்கு படையல் போட்டு செங்கரும்பு வைத்து அலங்கரித்து நன்றி கூறி வழிபடுவார்கள்.

7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால் 9 மணிக்கு மேல் சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும். எம கண்டம், குளிகை நேரம் தவிர்த்து நல்ல நேரத்தில் பொங்கல் வைத்து படையலிட்டு வணங்கினால் செல்வம் பெருகும்.. வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.

Post a Comment

Previous Post Next Post