Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Sunday, December 3, 2023

மழைக்கால காய்ச்சல் மற்றும் இருமலுக்கு இதமான கற்பூரவள்ளி ரசம்.!


தற்போது குளிர்காலம் மற்றும் மழைக்காலம் நடைபெற்று வருகிறது. இது போன்ற காலநிலை நிலவும் போது காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்றவை ஏற்பட அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற கால நிலைகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும் கற்பூரவள்ளி ரசம் செய்து பயன்படுத்தினால் நாவிற்கு சுவையாக இருப்பதோடு சளி மட்டும் காய்ச்சலும் காணாமல் போகும்.

இந்த கற்பூரவள்ளி ரசம் செய்வதற்கு ஒரு கடாயில் 1 டீஸ்பூன் கொத்தமல்லி, 1/2 டீஸ்பூன் சீரகம் மற்றும் மிளகு 2, காய்ந்த மிளகாய், தோல் உரிக்காத 3 பல் பூண்டு, 4 கற்பூரவள்ளி இலை மற்றும் இரண்டு நாட்டுத் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இரண்டு நிமிடம் வதக்கிய பின்னர் இவற்றை மிக்ஸி ஜாரில் மாற்றி அரைத்து பேஸ்ட் எடுத்துக் கொள்ளவும்.

இவற்றை அதே கடாயில் சேர்த்து இதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும். இவற்றுடன் 1/2 டீஸ்பூன் பெருங்காயம் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கட்டி நாட்டு சர்க்கரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கொதி வந்ததும் ஒரு நெல்லிக்காய் அளவிற்கு புளி எடுத்து நன்றாக தண்ணீரில் கலந்து அந்தப் புளி கரைசலை இதனுடன் சேர்க்கவும். பின்னர் சிறிது மல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் மிகுந்த கற்பூரவள்ளி ரசம் ரெடி.