Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 29, 2023

"சூடம் + தேங்காய் எண்ணெய்" போதும்.. இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

"சூடம் + தேங்காய் எண்ணெய்" போதும்.. இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

இன்றைய கால வாழ்க்கை சூழலில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக இந்த மூட்டு வலி பாதிப்பு இருக்கிறது. இவை முதலில் சாதாரண பாதிப்பாக தோன்றி பின்னர் தீராத தொல்லையை தொல்லையை கொடுத்து விடும்.இதனால் சிறு வேலை கூட செய்ய மிகவும் கடினமாக இருக்கும். இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தவது மிகவும் முக்கியம் ஆகும்.

மூட்டு வலியால் ஏற்படும் பாதிப்புகள்..

*ஜவ்வு தேய்மானம்

*உடல் சோர்வு

*எடை இழப்பு

*மூட்டு எழும்புகளில் வலி

மூட்டு வலியை குணமாக்க உதவும் வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*சூடம்

*தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து 3 முதல் 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். பின்னர் அதில் 2 சூடத்தை சேர்த்து கரைத்து எண்ணெய் சூடேறியதும் அடுப்பை அணைக்கவும்.

பின்னர் மூட்டு பகுதியை வெதுவெதுப்பான நீர் கொண்டு சுத்தம் செய்து ஒரு காட்டன் துணி கொண்டு துடைத்து கொள்ளவும்.

பிறகு தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை எடுத்து மூட்டு பகுதிகளில் ஊற்றி மஜாஜ் செய்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் மூட்டு வலி பாதிப்பு விரைவில் சரியாகும். இந்த ரெமிடியை இரவு தூங்குவதற்கு முன் பயன்படுத்தினால் விரைவில் தீர்வு கிடைக்கும்.

மற்றொரு தீர்வு:-

பாதி எலுமிச்சம் பழத்தை எடுத்து ஒரு பவுலில் சாறு பிழிந்து கொள்ளவும். அடுத்து ஒரு துண்டு சுக்கை உரலில் போட்டு இடித்துக் தூள் செய்து எலுமிச்சம் பழ சாற்றில் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

அடுத்து மூட்டுகளில் வலி இருக்கும் இடங்களில் தடவி நன்கு மஜாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் நாள்பட்ட மூட்டு வலி சில நாட்களில் சரியாகி விடும். இந்த ரெமிடியை இரவு தூங்குவதற்கு முன் பயன்படுத்தினால் விரைவில் தீர்வு கிடைக்கும்.

No comments:

Post a Comment