Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 29, 2023

குலதெய்வம் வீட்டில் தங்க எளிய வழிபாடு முறைகள்!!

குலதெய்வம் வீட்டில் தங்க எளிய வழிபாடு முறைகள்!!

நம் குலத்தை காக்க கூடிய குலதெய்வத்தை வாழையடி வாழையாக நாம் வணங்கி வருகிறோம்.

இப்படிப்பட்ட குலதெய்வம் நம் வீட்டில் தங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.

1)வீட்டிற்கு குல தெய்வ சக்தியை அழைக்க எளிய வழி உண்டு. மஞ்சள், குங்குமம். மண், சந்தனம், விபூதி,சாம்பிராணி, அடுப்புக்கரி - இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் மையத்திற்கு மேல் சுவரில் ஆணி அடித்து அதில் முடிந்து வைத்த துணியை ஆணியில் மாட்டி பத்தி சூடம் காண்பித்து வந்தால் ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.

2)உங்கள் வீட்டில் குல தெய்வம் தங்க ஒரு கலச செம்பில் பச்சை கற்பூரம், வெட்டிவேர், ஏலக்காய் ஆகியவற்றை சிறிதளவு சேர்த்து சம அளவு பன்னீர் மற்றும் தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்பு அந்த செம்பை நூல் கொண்டு சுற்றி கொள்ளவும்.

பிறகு உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு மரப்பலகை வைத்து அதில் தலைவாழை இலையை போட்டு கொள்ளவும். பின்னர் அதில் ஒரு ஆழாக்கு பச்சரிசி பரப்பி அதில் இந்த கலச செம்பை வைக்கவும். இந்த செம்பிற்குள் வெற்றிலைகளை செங்குத்தாக வைத்து அதற்கு நடுவில் ஒரு வாழைப்பூவை நுனி பகுதி மேல்நோக்கி இருக்குமாறு வைக்கவும்.

மந்திரம்:

ஓம் பவாய நம…
ஓம் சர்வாய நம…
ஓம் ருத்ராய நம …
ஓம் பசுபதே நம…
ஓம் உக்ராய நம…
ஓம் மஹாதேவாய நம…
ஓம் பீமாய நம…
ஓம் ஈசாய நம…

என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வில்வ இலைகள், ஊமத்தம் பூக்கள் கொண்டு கலசத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

இப்பூஜையை தொடர்ந்து 3 நாட்களுக்கு செய்ய வேண்டும். பூஜை முடிந்த பிறகு கலசம் வைக்கப்பட்ட பச்சரிசி மற்றும் வாழைப்பூவை சமைக்க பயன்படுத்திக் கொள்ளலாம். கலசத்தில் உள்ள நீரை நமது வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். மேற்க்கண்ட முறையில் பூஜை செய்பவர்களின் இல்லத்தில் அவர்களின் குலதெய்வம் நிரந்தரமாக வாசம் செய்து நமக்கு நல்லருள் புரியும்.

No comments:

Post a Comment