Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 31, 2023

பிளாஸ்மாவை கண்டுபிடித்தது விக்ரம் லேண்டர் -உலகையே திரும்பி பார்க்க வைக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்ட கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது.

பின்னர் விக்ரம் லேண்டரிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வை தொடங்கியுள்ளது. இந்த ஆய்வில் தற்போது சில தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதாவது, நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்திருக்கிறது. அதேபோல இங்கு ஹைட்ரஜன் இருக்கிறதா? என்பதை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் ஹைட்ரஜன் இருக்கும் இடத்தில்தான் நீர் இருக்கும். ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்ஸிஜன் ஒரு பங்கும் சேர்ந்தால்தான் (H2O) நீர் உருவாக முடியும். இதனால் ரோவர் ஆக்ஸிஜன் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று காலை விக்ரம் லேண்டரின் படத்தை பிரக்யான் ரோவர் கிளிக் செய்துள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது மேலும் அந்த படத்தையும் வெளியிட்டுள்ளது. ஒரு குழந்தை தனது தயை படம் எடுத்து போல் விகாரம் லேண்டரில் இருந்து வந்த பிரக்யான் ரோவர் லேண்டரை புகைப்படம் எடுத்துள்ளது. மேலும் இந்த படம் ரோவரில் உள்ள நேவிகேஷன் கேமராவால் எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ விக்ரம் லேண்டரின் "RAMBHA LP" அறிவியல் ஆய்வு கருவியின் ஆய்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பது உறுதி செய்துள்ளதாகவும், ஒரு கன மீட்டருக்கு தோராயமாக 50 லட்சம் முதல் 3 கோடி எலக்ட்ரான்கள் அடர்த்தி உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. RAMBHA-LP பேலோட் மேம்பாடு SPL/VSSC, திருவனந்தபுரத்தால் வழிநடத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment