கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட கள ஆய்வு பணியாளா்களுக்கு பயிற்சி

கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தில் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபாா்க்கும் களஆய்வு பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 1,428 நியாயவிலைக் கடைகளில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 3 கட்டங்களாக நடத்தப்பட்டன. இதில் 9,58,807 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்த விண்ணப்பங்களை களஆய்வு செய்ய ஒரு நியாயவிலைக் கடைக்கு ஒரு களஆய்வு பணியாளா் என்ற வீதத்தில் 1,428 களஆய்வு பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு களஆய்வு பணி, செயலியில் எவ்வாறு தகவல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்து உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஆய்வு பணியாளா்களுக்கான பயிற்சிக்கான அறிவுரைகைளை ஆணையா் வழங்கினாா்.
Previous Post Next Post