செவ்வாய் பகவானால் ராஜயோகம் பெரும் ராசிக்காரர்கள்!

நவகிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தன்மை இருக்கும். அப்படி சுப கிரகங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் கோபம், வீரம், தைரியம், தன்னம்பிக்கை உள்ளிட்டவற்றிற்கு காரணியாக விளங்குகிறார்.

செவ்வாய் பகவான் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தனது ஆசையை மாற்றுவார்.

இதுவரை செவ்வாய் பகவான் சிம்ம ராசியில் பயணித்து வந்தார் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று கன்னி ராசிக்குள் நுழைந்தார். வரும் அக்டோபர் மூன்றாம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும் ஆனால் இந்த இரண்டு மாத காலம் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மிதுன ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் நான்காம் வீட்டில் சென்று உள்ளார். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியமான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிதாக சொத்து வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் மூன்றாம் வீட்டில் சென்று உள்ளார். மிகுந்த ஆற்றலோடு செயல்படுவீர்கள். உங்களைத் தேடி வரும் சவால்களை சமாளிப்பீர்கள். செலவு செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும்.

விருச்சிக ராசி

உங்களுக்கு நல்ல யோகம் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது ஏனென்றால் உங்கள் ராசியில் பதினோராம் வீட்டில் செவ்வாய் பகவான் சென்றுள்ளார். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் செவ்வாய் பகவான் சென்றுள்ள காரணத்தினால் பல்வேறு விதமான வெற்றிகளை காணப் போகிறீர்கள். குடும்ப வாழ்க்கையில் எந்த சிக்கல்களும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பல்வேறு சிக்கல்களுக்கு நிவர்த்தி உண்டாகும். புதிய முதலீடுகள் வெற்றியை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post