இப்பூவுலகில் ஒரு சிலருக்கு நன்மை என்று நடந்தால், மறுபுறம் ஒரு சிலருக்கு தீமை என்பதும் நடக்கும். அதேபோல் தான், நற்சக்தி என ஒன்று இருந்தால், தீய சக்தி என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும் எனப் பலரும் நம்புகின்றனர்.
அது பல இடங்களில் இயல்பாக நடப்பதையும் பார்க்கமுடிகிறது. இந்த தீயசக்தி என்பதை ஒரு நெகட்டிவான எனர்ஜி என்று கூட வரையறுக்கலாம்.
இந்த நெகட்டிவ் எனர்ஜியை, நமது வீட்டிற்கு வருபவர்கள் சில நேரம் உருவாக்கலாம்; அவ்வாறு இல்லையெனில் வீட்டில் இருப்பவர்களே உருவாக்கிக்கொள்கின்றனர்.
நமது வீட்டில் நாம் செய்யும் சில காரியங்கள், நம் வீட்டில் இருப்பவர்களின் நிம்மதியை நிலைகுலையசெய்துவிடும். அதாவது மற்றவர்களைப் பற்றி தவறாகப் புறம்பேசுவது, பணம் இல்லை என்று எப்போதும் பஞ்சப்பாட்டு பாடுவது, எனக்கு எந்த நன்மையும் நிகழவில்லை என புலம்புவது, வீட்டில் கோபமாக வார்த்தைகளை அடிக்கடி உதிர்ப்பது ஆகியவை நெகட்டிவ் எனர்ஜி வீட்டில் குடியேற காரணமாக அமைந்துவிடும்.
பொறாமை எண்ணங்களுடன் வீட்டிற்கு வரும் நபர்கள் மூலமாகவும் நெகட்டிவ் எனர்ஜி நமதுவீட்டில் நாற்காலி போட்டு அமர்ந்துவிடும். இந்த நெகட்டிவ் எனர்ஜி வீட்டில் அதிகரித்தால், வீட்டில் உள்ள தெய்வசக்தி அதாவது பாசிட்டிவ் எனர்ஜி வீட்டைவிட்டு போய்விடும். இதனால் வீட்டில் பல கெட்ட காரியங்கள் நடைபெறும்; அடிக்கடி சண்டை வரும். இதனைத் தவிர்க்க சில பரிகாரங்கள் உண்டு. அவையாவன:ஒரு மாலை வேளையில் 6 மணியளவில் குடும்ப உறுப்பினர்கள், அனைவரும் ஒன்றுசேர்ந்து, ஒரு கைப்பிடி அளவு பச்சரியினை எடுத்துக்கொண்டு, சிட்டிகை மஞ்சள், 5 மிளகு ஆகியவற்றை எடுத்து நன்கு இடித்துக்கொண்டு, ஒரு தாம்பூலத்தட்டில் வைத்து பரப்பிவிட்டு, கற்பூரம் ஏற்றி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைத்து வழிபடவேண்டும்.
இரவில் தூங்கப்போவதற்கு முன்பு நிலைவாசலில், அந்த வழிபட்ட பச்சரிசியை எடுத்து, ஒருகோடுபோல் போட்டுவிட்டு தூங்கச்செல்லவேண்டும். இதனைத்தொடர்ந்து, காலையில் சீக்கிரம் எழுந்து, அந்த பரப்பிய அரிசியை செடி அல்லது பாயும் நதிகளில் போட்டுவிடுவது நல்லது. அவ்வாறுசெய்யும் பட்சத்தில்,ஒரு பாசிட்டிவ் எனர்ஜி குடும்பத்தில் பெருகும்.
அவ்வாறு கோடுபோம்போது, 'பைரவாயா நமஹ' என்னும் மந்திரத்தை பாராயணம் செய்யவேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து 21 நாட்கள் செய்துவந்தால்,நெகட்டிவ் எனர்ஜி படிப்படியாக குறையும்.
மந்திரத்தை எத்தனை முறைவேண்டும் என்றாலும் உச்சரிக்கலாம்.
இவ்வாறு கோடுபோட்டுவிட்டு, வீட்டிற்குள் தூங்கச்சென்றால் காலை வரை, அக்கதவைத் திறக்கக்கூடாது. தொடர்ந்து இதனை 21 நாட்கள் கடைப்பிடித்தால் நிச்சயம் உங்கள் வீடுகளில் பாஸிட்டிவ் மாற்றங்கள் வரும்.
Tags:
நம்பிக்கை