Saturday, August 19, 2023

எடையை குறைக்கணும்.. புரோட்டீன் சத்தும் வேணும்! முட்டையை இப்படி செய்து சாப்பிடுங்க

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகளோடு, உணவு முறையும் அவசியம், குறிப்பாக புரோட்டீன் உணவுகளும் அவசியம்.

முட்டையில் அதிகளவு புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

முட்டையில் உள்ள புரதங்கள் உங்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதால். இதனால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறைகிறது.


healthshots

முட்டை உண்பதால் கிடைக்கும் நன்மைகள்

முட்டையில் உள்ள புரதம் முட்டையை சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வை கொடுப்பதால் நாம் கூடுதலாக உணவை உண்ண விரும்புவதில்லை. இது ஒட்டுமொத்த கலோரிகள் உட்கொள்வதை தடுக்கிறது.

முட்டையில் கலோரிகள் குறைவாக உள்ளதால் , கலோரிகள் குறைந்த மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள், முட்டையை உண்ணலாம்.

முட்டையில் வைட்டமின் பி, செலினியம், பாஸ்பரஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் போன்ற மினரல்கள் போன்றவை உள்ளதால் இது எடை இழப்பிற்கு உதவுகிறது.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் முட்டையை தவறாமல் எடுத்துக்கொண்டால் உடலில் ரத்த சர்க்கரை அளவை சீராக்குவதுடன், இன்சுலின் அதிகரிப்பை குறைக்கிறது.

உடல் எடையை குறைக்க உதவும் முட்டை,கீரை ,காளான் ஆம்லேட்.

தேவையான பொருட்கள்முட்டை - 2
வெங்காயம் -1
கீரை - ஒரு கைப்பிடி
காளான் - ஒரு கைப்பிடி
மிளகுத்தூள் - கால் ஸ்பூன்
சீரகத்தூள் - கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீரை மற்றும் காளானை சேர்த்துகொள்ளவேண்டும்.

இதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் ஆகியவை சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

இதனை தோசைக்கல்லில் வழக்கமாக ஆம்லேட் செய்வது போலவே செய்து சாப்பிடலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News