Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Friday, July 21, 2023

கண்ணுக்கே தெரியாத 100 விதமான நோய்களை விரட்டி அடிக்க கூடிய அற்புதமான ஜூஸ்!!


கண்ணுக்கே தெரியாமல் இருக்கக்கூடிய 100 விதமான நோய்களை துரத்தி அடிக்கும் அந்த அளவுக்கு இயற்கை நமக்கு கொடுத்த முதல் மருந்து பயன்படுத்தி ஒரு சுவையான ஆரோக்கியமான ஜூஸை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

இதை நீங்கள் வாரத்தில் மூன்று முறை குடித்தாலே போதும் உங்க உடம்பில் இருக்கக்கூடிய சோர்வு உடலில் இருக்கக்கூடிய கண்ணுக்கே தெரியாத நோய்கள் அனைத்தையும் முழுமையாக குணமாக்கி விடும்.

இதற்கு முதலில் நமக்கு தேவைப்படுவது அருகம்புல். ஒருவேளை அருகம்புல் கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் விற்கும் அருகம்புல் பொடியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அருகம்புல்லில் அதிகப்படியான குளோரோஃபில் இருக்கிறது. இது நமக்கு இயற்கை கொடுத்த முதல் மருந்து ஆகும். இந்த குளோரோஃபில் நம் உடம்பில் சிவப்பு ரத்த அணுக்களுடைய எண்ணிக்கையை அதிகரிக்கும். இதனால் ஹீமோகுளோபின் குறைபாடு நீங்கி ரத்தத்தை நல்ல சுத்தப்படுத்தும். புது ரத்தத்தை ஊறவைக்கும். உடம்பில் சில பேருக்கு கொழுப்பு கட்டி இருக்கும்.

இதை குடிப்பதால் அந்த கொழுப்பு கட்டி பிரச்சனைகளையும் சரி செய்யும். மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுக்குள் வைக்கும். வாய் துர்நாற்றம் வயிற்றுப்புண் வாய்ப்புண் இது எல்லாத்தையும் சரி செய்யும். முக்கியமாக மூலத்தை முற்றிலுமாக அகற்றக் கூடிய தன்மை இதற்கு உண்டு. சர்க்கரை நோயை கட்டுக்கொள்ள வைக்கும். நரம்புகள் இருக்கக்கூடிய அடுப்புகளை நீக்கும். நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளையும் சரிசெய்யும்.

எனவே இந்த அருகம்புல்லை பயன்படுத்தி ஒரு சூப்பரான ஜூஸ் எப்படி ரெடி பண்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
அருகம்புல்
மிளகு
சீரகம் 
மோர் அல்லது தண்ணீர்

செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் அருகம்புல்லை நன்கு கழுவி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் இதனுடன் மூன்று மிளகு அரை தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு கப் அளவு மோர் அல்லது தண்ணீரை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை வடிகட்டி இதனுடன் மேலும் சிறிதளவு மோர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அருகம்புல் பொடியில் இதை செய்ய வேண்டுமானால் ஒரு கிளாஸ் மோரில் அரை டீஸ்பூன் சீரக பொடி கால் டீஸ்பூன் மிளகு பொடி சேர்த்து மற்றும் அரை டீஸ்பூன் அருகம்புல் பொடியையும் சேர்த்து நன்கு கலந்து குடித்து வரலாம். மோர் பிடிக்காதவர்கள் மோருக்கு பதிலாக தண்ணீர் அல்லது தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

இந்த ஜூஸை வாரத்திற்கு மூன்று நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இவ்வாறு இதைத்தொடர்ந்து குடித்து வர உடம்பில் நமக்கே தெரியாமல் இருக்கக்கூடிய கண்ணுக்கு தெரியாது 100 வகையான நோய்களை முற்றிலுமாக குணமாக்கி விடும். உடல் சோர்வை முற்றிலுமாக நீக்கி உடலை வலுப்பெற வைக்கும் மற்றும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த அருகம்புல் ஜூஸ் குடிக்க உடல் எடை குறையும்.