Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 3, 2023

நடப்பு நிகழ்வுகள் – 04 மே 2023

தேசிய செய்திகள்

பேரிடர் குறைப்பு தொடர்பான 2வது ஜி-20 பணிக்குழு கூட்டமானது மும்பையில் தொடங்குகிறது.உலகளாவிய பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான ஜி-20 செயற்குழுவின் 2வது கூட்டம் மும்பையில் மே 23 முதல் 25 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மைத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் ஆற்றிய பணிகள் தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. G-20 கவுன்சிலின் பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்குழுவின் கூட்டம் மூலம் இதை உலக தரத்திற்கு உயர்த்த உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவும் இஸ்ரேலும் முக்கியமான “தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு” ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.இந்தியாவின் CSIR மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகம் (DDR&D) இடையே பல துறைகளுக்கான மேம்பாட்டு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறைகளில் கூட்டு முதலீடுகள் மற்றும் புதிய முயற்சிகள் மூலம் நமது உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை சமாளிக்க பெரிய பங்களிப்பை இந்தியா–இஸ்ரேல்-USA-UAE(I2U2) ஆகியவை இந்த உலகத்திற்கு வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

உற்பத்தியில் மிகவும் புதுமையான மாநிலமாக தெலுங்கானா உள்ளது என்று சமீபத்தில் அரசு ஆய்வறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்த மாநிலங்களில் இருந்து கணக்கெடுக்கப்பட்டதில் உற்பத்தி நிறுவனங்களில், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவை முறையே 46.18 சதவீதம், 39.10 சதவீதம் மற்றும் 31.90 சதவீதம் என்ற அளவில் புதுமையான நிறுவனங்களின் பங்கில் முறையே முன்னனியைக் கொண்டுள்ளது.
டிஎஸ்டி தரவரிசையில் கர்நாடகா, அதைத் தொடர்ந்து தெலுங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் உயர் கண்டுபிடிப்பு பிரிவில் உள்ளன. உத்தரகாண்ட் மாநிலமானது மலை மாநிலங்களில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது, அதைத் தொடர்ந்து தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்கள் பிரிவில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது

சர்வதேச செய்திகள்
அரேபியன் டிராவல் மார்ட்(ATM) 2023- இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகமானது பங்கேற்கிறது.. “அரேபியா டிராவல் மார்க்கெட் 2023″ துபாயில் 2023 மே 01 முதல் 04 வரை நடைபெறுகிறது. இந்தியா அரங்கமானது மே 1 ஆம் தேதி “அரேபியன் டிராவல் மார்ட் 2023″ என்ற முயற்சி துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் மூத்த பொருளாதார ஆலோசகர் ஸ்ரீ கியான் பூஷன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது.
. இந்தியாவின் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக இந்தியாவை மேம்படுத்துவதற்கும் இந்த தளமானது ஒரு ஊக்கியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பராகுவேயின் அதிபராக சமீபத்தில் சாண்டியாகோ பெனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.வலதுசாரி கொலராடோ கட்சியின் வேட்பாளரும் முன்னாள் IMF பொருளாதார நிபுணருமான பெனா சாண்டியாகோ மத்திய–இடதுசாரி கட்சியின் “எஃப்ரைன் அலெக்ரேவை” தோற்கடித்து வெற்றி கண்டார்.

44 வயதான பெனா சாண்டியாகோ 43 சதவீத வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி கண்டார்.பெனா சாண்டியாகோ ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதிபராக பதவியேற்கிறார்.

இந்தியாவின் ரஃபேல் ஜெட் விமானங்கள் பிரான்சில் நடைபெறும் ஓரியன் பயிற்சியில் பங்கேற்கின்றன.பிரான்சில் நடைபெறும் “ஓரியன்” என்ற சர்வதேச ராணுவ பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரபேல் விமானங்கள் பங்கேற்றன .ரபேல் விமானம் வாங்கிய பின்பு, வெளிநாட்டு ராணுவ பயிற்சியினுள் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
ரபேல் விமானத்தை ஒட்டிய முதல் பெண் விமானியான சிவாங்கி சிங் பிரான்சில் இதை இயக்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாக இந்தியா முழுவதும் பார்க்கப்படுகிறது.


மாநில செய்திகள்

மக்களை தேடி மேயர் திட்டம் சென்னை மாநகராட்சியில் தொடங்கியது.பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு அதை தீர்க்கும் வகையில் மே 03 அன்று சென்னையில் மக்களை தேடி மேயர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மேயரிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் மனுக்களை கொடுக்கலாம் என்றும் புகார் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.


சென்னையில் மின்காந்த அதிர்வலை சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.2.30 கோடியில் “சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மையத்தை” தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மே 02 அன்று திறந்து வைத்தார்.
தற்போது திறக்கப்பட்ட “மின்காந்த அதிர்வலை சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மையத்தில்” அதிநவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளன என்றும் இந்த மையத்தில் அறுவை சிகிச்சை, ரத்த போக்கு, மயக்க மருந்து இல்லாமல் சிறுநீரக கல்லை அகற்றலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பொருளாதார செய்திகள்

ஒரே நாளில் FASTag அமைப்பின் மூலம் தினசரி சுங்க வசூலானது ரூ. 193.15 கோடி எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.29 ஏப்ரல் 2023 அன்று ஒரே நாளில் FASTag அமைப்பின் மூலம் தினசரி சுங்க வசூல் ஒரு வரலாற்று சாதனையை எட்டியது, இது கடந்த ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ. 193.15 கோடி பெற்றுள்ளது. இந்த சாதனையானது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1.16 கோடி பரிவர்த்தனைகள் பெற்று சாதனை படைத்துள்ளது.

அனைத்து சாலைப் பயனாளர்களுக்கும் தடையற்ற மற்றும் தொந்தரவில்லாத டோல் அனுபவத்தை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் அந்த வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி, இரும்பு ஆகிய தாதுக்களின் உற்பத்தி கடந்த ஆண்டுகளை விட அதிகம் பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி லிமிடெட் ஏப்ரல் 2023 இல் அதன் சுரங்கங்களில் இருந்து 148% நிலக்கரி பிரித்தெடுத்ததாக அறிவித்தது.

ஏப்ரல் 2022 இல் பதிவு செய்யப்பட்ட 1.11 மில்லியன் மெட்ரிக் டன் (எம்எம்டி) நிலக்கரியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு (2023) ஏப்ரலில் 2.75 மில்லியன் மெட்ரிக் டன் (எம்எம்டி) நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.இந்த ஆண்டு NMDCயின் இரும்புத் தாது உற்பத்தி ஏப்ரல் 2022 ஐ விட 11.42% அதிகமாகும் மற்றும் விற்பனையின் வளர்ச்சி கடந்த ஆண்டை விட 9.93% ஆகும்.

உலக வளர்ச்சியில் இந்தியா மற்றும் சீனா பாதி பங்களிப்பை ஏற்படுத்தியுள்ளது – ஐ எம் ப் ஆய்வறிக்கை.குறிப்பிடத்தக்க ஆசியா–பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி 2022 இல் பதிவுசெய்யப்பட்ட 3.8 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டில் 4.6 சதவீதமாக இந்தியா மற்றும் சீனாவால் அதிகரிக்கும் என சர்வதேச நிதி ஆணையம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
“2023 ஆம் ஆண்டில் ஆசியா மற்றும் பசிபிக் உலகின் முக்கிய பிராந்தியங்களில் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்குமென்றும் இதில் முக்கியமாக சீனா மற்றும் இந்தியாவிற்கான பங்கு பெரியதாக இருக்கும்” என்று IMF கூறியிருக்கிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

அமெரிக்காவில் உலகின் மிகச்சிறிய தோல் புற்றுநோயை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ஒரு பெண்ணின் முகத்தில் ஒரு பாதிப்பில்லாத சிறிய சிவப்புப் புள்ளியை மருத்துவமனையில் சோதித்து பார்த்ததில் அது உலகத்தின் மிக சிறிய தோல் கேன்சர் என கண்டறியப்பட்டது.
இது ஓரிகான் ஹெல்த் அண்ட் சயின்ஸ் யுனிவர்சிட்டியின் (OHSU) தோல் மருத்துவர்கள் குழுவால் கண்டறியபட்டுள்ளது.இது 0.65 மில்லிமீட்டர்கள் அல்லது 0.025 அங்குலங்கள் என அளவிடப்பட்டது.


விளையாட்டு செய்திகள்

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ(136 மில்லியன்) பெறுகிறார்.கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே, லெப்ரான் ஜேம்ஸ் மற்றும் கனெலோ அல்வாரெஸ் ஆகியோர் 2023 ஆம் ஆண்டில் அதிக வருமானம் பெரும் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸின் அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலின்படி, கடந்த 12 மாதங்களில் உலகின் அதிக சம்பளம் வாங்கும் முதல் பத்து விளையாட்டு வீரர்கள் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக $1.11 பில்லியன் சம்பாதித்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச தொகை என்பது இதில் குறிப்பிடத்தக்கது.


முக்கிய தினம்

உலக பத்திரிகை சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும், பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்த பத்திரிகை சுதந்திர தினமானது மே 03 அன்று கொண்டாடப்படுகிறது.

“உரிமைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பது: மற்ற அனைத்து மனித உரிமைகளுக்கும் ஒரு இயக்கியாக கருத்துச் சுதந்திரம் விளங்குவது‘ என்பது 2023க்கான கருப்பொருளாகும்.

No comments:

Post a Comment