Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 9, 2023

டிகிரி தகுதி போதும் சி- டாக் நிறுவனத்தில் 570 காலியிடங்கள்

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அறிவியல் அமைப்பான சி-டாக் (Centre for Development of Advanced Computing) பல்வேறு காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான நாட்கள்:

இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: பிப்ரவரி 20, மாலை 6 மணி வரை

நேர்காணல் தேர்வு: பின்னர் அறிவிக்கப்படும்.

காலியிடங்கள்:

பணிகாலியிடங்கள் எண்ணிக்கை
Project Associate 30
Project Engineer/Marketing Executive 300
Project Manager / Programme Manager / Program Delivery Manager / Knowledge Partner/Prod. Service & Outreach (PS&O) Manager 40
Senior Project Engineer / Module Lead / Project Lead/Prod. Service & Outreach (PS&O) Officer 200

ஏஐசிடிஇ மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி அறிவியல், தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி தொழில்நுட்பம், பெருங்கடல் அறிவியல் (Ocean Science), அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறன் ஆற்றல் கொண்ட மாணவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, விண்ணப்பக் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பம் செய்வது எப்படி, தேர்வு முறை, சம்பளம், முன்அனுபவம் ஆகியவை குறித்து சி-டாக் இணைய தளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் தளத்தில் உள்ள விவரங்களை முழுமையாக படித்து பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், விவரங்கள் பெற recruitment@cdac.in என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

No comments:

Post a Comment