ஜனவரி 31 வரை வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர் பட்டியல் வெளியீடு...!

தமிழ்நாடு முழுவதும் 67 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்களை தற்போது மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 243 பேரும், 19 முதல் 30 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்கள், 28 லட்சத்து 56 ஆயிரத்து 606 பேரும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக...தலைமுடியை தானமாக கொடுத்த கல்லூரி மாணவிகள்!

அதேசமயம் 31 முதல் 45 வயது வரை அரசுப்பணி வேண்டி பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 31 ஆயிரத்து 930 பேர் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 46 முதல் 60 வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 185 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 734 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 37 ஆயிரத்து 244 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 51 ஆயிரத்து 555 நபர்களும் பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறாக மொத்தம் 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 பேர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Related Posts

Previous
Next Post »
Comments


EmoticonEmoticon