Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, January 29, 2022

8TH TAMIL இயல் 9 வினாவிடை!!

1 ) கீழ்க்கண்டவற்றில் பன்மைத் தொடரில் பயன்படுத்தப்படும் வார்த்தை எது ?
A ) தான்
B ) தன்னை
C ) தனக்கு
D ) தமது 👍


2 ) கோமகளின்- இயற்பெயர் என்ன ?
A ) அம்பை
B ) வெண்ணிலா
C ) இராஜலட்சுமி 👍
D ) லட்சுமி


3 ) உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணரவைப்பது எவ்வகை அணி?
A ) வேற்றுமை அணி
B ] ஏகதேச உருவக அணி
C ) உவமை அணி
D ) பிறிதுமொழிதலணி 👍


4 ) கூற்று ( 1 ) : - ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் என்னும் அணியாகும்
கூற்று ( 2 ) : - இதனை அடுக்குத் தொடர் என்றும் கூறுவர்.
A ) கூற்று 1,2 சரி
B ) கூற்று 1 சரி 2 தவறு 👍
C ) கூற்று 1,2 தவறு
D ) கூற்று 1 தவறு 2 சரி


5 ) அரசியலமைப்பு வரைவுக் குழு தனது அறிக்கையை எப்போது ஒப்படைத்தது ?
A ) பிப்ரவரி 20,1947 👍
B ) பிப்ரவரி 21,1948
C ) நவம்பர் 26,1948
D ) நவம்பர் 20,1949


6 ) அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு ?
A) 1990👍
B ) 1991
C) 1992
D) 1993

7) அடுத்தவர் வாழ்வைக் கண்டு …………… கொள்ளக்கூடாது.
A) உவகை
B) நிறை
C) அழுக்காறு👍
D) இன்பம்

8) நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று ……………..
A) பொச்சாப்பு👍
B) துணிவு
C ) மானம்
D) எளிமை


9) இன்பதுன்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
A) இன்பத் + துன்பம்
B) இன்பம் + துன்பம்👍
C) இன்ப + அன்பம்

D) இன்ப + அன்பு

10) குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) குணங்கள் எல்லாம்
ஆ) குணமெல்லாம்
இ) குணங்களில்லாம்
ஈ) குணங்களெல்லாம்👍

11) பொருள் கூறுக "மையல்"
பொறுமை
விருப்பம்👍
மேன்மை
கொள்கை

12) பொருள் கூறுக "பொறை"
மேன்மை
பொறுமை👍
கொள்கை
விருப்பம்

13) இறையரசனின் இயற்பெயர் …………………….
சே.தங்கராசு
சே.சேசுராசா👍
மணவாளன்
பூவரசன்

14) இறையரசன் ஆற்றிய பணி …………………..
வரலாற்று ஆய்வாளர்
கணித பேராசிரியர்
தமிழ் பேராசிரியர்👍
அரசவை புலவர்

15) ஆண்டாள் பாடிய நூல் …………………
திருவெம்பாவை
திருப்பாவை👍
திருப்பாடல்
கிருஷ்ணலீலா

16) மாணிக்கவாசகர் இயற்றியது …………………….
திருவெம்பாவை👍
திருப்பாவை
திருப்பாடல்
சிவபுராணம்
17) உன்னுடன் நீயே ………………… கொள்.
அ) சேர்ந்து
ஆ) பகை
இ) கைகுலுக்கிக்👍
ஈ) நட்பு

18) கவலைகள் …………………. அல்ல.
அ) சுமைகள்
ஆ) சுவைகள்

இ) துன்பங்கள்
ஈ) கைக்குழந்தைகள்👍

19) விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………
அ) விழியெழும்
ஆ) விழித்தெழும்👍
இ) விழித்தழும்
ஈ) விழித்து எழும்

20) மு.மேத்தா …………….. இயக்க கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
இலக்கிய
ஹைக்கூ
வானம்பாடி👍
மாணவர்

21). மு.மேத்தாவின் படைப்புகளுள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் …………………..
சோழநிலா
மகுடநிலா
ஊர்வலம்
ஆகாயத்துக்கு அடுத்தவீடு👍

22) மு.மேத்தா இயற்றிய நூல்களில் தவறானது எது?
தண்ணீர் தேசம்👍
ஊர்வலம்
சோழநிலா
மகுட நிலா


23) இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் …………….
அ) இராதாகிருட்டிணன்
ஆ) அம்பேத்கர்👍
இ) நௌரோஜி
ஈ) ஜவஹர்லால் நேரு

24) பூனா ஒப்பந்தம் ………………….. மாற்ற ஏற்படுத்தப்பட்டது.
A) சொத்துரிமையை
B) பேச்சுரிமையை
C) எழுத்துரிமையை
D) இரட்டை வாக்குரிமையை👍

25) சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் …………….
A) சமாஜ் சமாத சங்கம்👍
B) சமாத சமாஜ பேரவை
C) தீண்டாமை ஒழிப்புப் பேரவை
D) மக்கள் நல இயக்கம்

26) புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் …………………..
A) புத்த வேதம்
B) புத்தர் போதனைகள்
C) புத்தரும் அவரின் தம்மமும்👍
D) பெளத்த மார்க்கம்

27) அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் ………………….
A) அம்பேத்கர் மக்கள் இயக்கம்
B) தொழிலாளர் இயக்கம்
C) சுதந்திரத் தொழிலாளர் கட்சி👍
D) மக்கள் விடுதலை முன்னணி

28) அம்பேத்கர் பிறந்த நாள் …………………….
A) 14.04.1881
B) 14.04.1891 👍
C) 15.04.1891
D) 15.04.1881


29) அம்பேத்கர் பண்டைக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றார்.
A) 1918
B) 1919
C) 1925
D) 1915👍


30) அம்பேத்கர் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்ற ஆண்டு ………………
A) 1921👍
B) 1922
C) 1931
D) 1932


31) ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக அம்பேத்கர் 1925ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.


A) சரி
B) தவறு👍


32) அம்பேத்கரின் படிப்பிற்கு உதவிய மன்னர் ?
A) ஹைதராபாத் நிஜாம்
B)பரோடா மன்னர்👍
C)மைசூர் மஹாராஜா
D)ஜெய்ப்பூர் மன்னர்


33) ஒடுக்கப்பட்ட பாரதம் - இதழ் அம்பேத்கர் துவங்கிய ஆண்டு?
A) 1922
B) 1932
C) 1927👍
D) 1937


34 ) கோமகளின் தமிழ்நாடு அரசின் விருது பெற்ற நூல் எது ?
A ) உயிர் அமுதாய்
B ) நிலாக்கால நட்சத்திரங்கள்
C ) அன்பின் சிதறல்
D ) அன்னை பூமி 👍


35 ) பண்டைக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக அம்பேத்கர் முதுகலை பட்டம் பெற்ற ஆண்டு ?
A ) 1915 👍
B ) 1917
C ) 1923
D ) 1920


36 ) ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை அமைப்பை அம்பேத்கர் நிறுவிய ஆண்டு ?
A ) 1920
B ) 1924 👍
C ) 1927
D ) 1928


37 ) அம்பேத்கர் மரணமடைந்த ஆண்டு ?
A ) 1957 , டிசம்பர் 6
B ) 1958 , டிசம்பர் 6
C ) 1956 , டிசம்பர் 6 👍
D ) 1955 , டிசம்பர் 5


38 ) மாநில சுயாட்சி வழங்குவதற்காக இந்திய அரசின் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
A ) 1930
B ) 1935 👍
C ) 1919
D ) 1909


39 ) பிரிதுமொழிதல் அணியில் ........... மட்டும் இடம்பெறும்.
A ) உவமை 👍
B ) உவமேயம்
C ) தொடை
D ) சந்தம்


40 ) இரட்டுறமொழிதல் அணி யின் வேறு பெயர் என்ன ?
A ) பிறிதுமொழிதல் அணி
B ) வேற்றுமை
C ) உவமை
D ) சிலேடை👍

No comments:

Post a Comment