Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, September 12, 2021

PG TRB MATHS Study Material - 26

1. 2010 ஆம் ஆண்டு ஒரு நகரத்தின் மக்கள் தொகை 1,57,325 எனில் அடுத்த ஆண்டில் 16 சதவிகிதம் அதிகரித்தால் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை?

  •   182497
  •   181972
  •   183942
  •   187942

 

2. ஒரு கூடையில் 36 ஆப்பிள்களில், 5 ஆப்பிள்கள் அழுகிவிட்டன எனில், அழுகிய ஆப்பிள்களின் சதவீதம்?

  •   17.36 %
  •   13.41 %
  •   13.89 %
  •   14.39 %

 

3. 35 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பில் ஒரு குறிப்பிட்ட நாளில் 7 மாணவர்கள் வருகை தரவில்லை எனில், வருகை தராத மாணவர்களின் சதவீதம்?

  •   15 %
  •   20 %
  •   30 %
  •   25 %

 

4. 250 மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியில், 55 மாணவர்கள் கூடைபந்தையும், 75 மாணவர்கள் கால்பந்தையும், 63 மாணவர்கள் எறிபந்தையும் மீதம் உள்ளவர்கள் மட்டைபந்தையும் விரும்புகின்றனர் எனில், கூடைபந்தை விரும்பும் மாணவர்

  •   17.5 %
  •   18.5 %
  •   22 %
  •   42 %

 

5. 1500 மாணவர்கள் கொண்ட பள்ளிக்கு 90 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் எனில், 2000 மாணவர்கள் கொண்ட பள்ளிக்கு தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை?

  •   115 ஆசிரியர்கள்
  •   120 ஆசிரியர்கள்
  •   130 ஆசிரியர்கள்
  •   145 ஆசிரியர்கள்

 

6. ஒரு வேலையை 7 ஆட்கள், 52 நாட்களில் செய்து முடிகின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை?

  •   7 நாட்கள்
  •   19 நாட்கள்
  •   37 நாட்கள்
  •   28 நாட்கள்

 

7. 360 கி.மீ தூரத்தை இரயில் 4 மணி நேரத்தில் கடக்கின்றது. அதே வேகத்தில் இரயில் சென்றால் 6 மணி 30 நிமிடங்களில் கடக்கும் தூரம்?

  •   425 கி.மீ
  •   555 கி.மீ
  •   585 கி.மீ
  •   385 கி.மீ

 

8. ஒரு வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளின் விகிதம் 4 : 5, மாணவர்களின் எண்ணிக்கை 20 எனில், மாணவிகளின் எண்ணிக்கை?

  •   30 மாணவிகள்
  •   40 மாணவிகள்
  •   25 மாணவிகள்
  •   15 மாணவிகள்

 

9. 24 மீட்டர் நீளமுள்ள ஒரு ரிப்பன் 3 : 2 : 7 என்ற விகிதத்தில் 3 துண்டுகளாக வெட்டப்படுகிறது எனில் முதல் துண்டின் நீளம் என்ன?

  •   6 மீட்டர்
  •   4 மீட்டர்
  •   10 மீட்டர்
  •   8 மீட்டர்

 

10. 60 மாணவர்கள் கொண்ட வகுப்பில், மாணவ, மாணவிகளுக்கு இடையேயான விகிதம் 2 : 1 எனில் அவ்வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை?

  •   40 மாணவர்கள்
  •   20 மாணவர்கள்
  •   50 மாணவர்கள்
  •   60 மாணவர்கள்

No comments:

Post a Comment