Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 1, 2021

தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா விடை - 02

1.சிலப்பதிகாரம் தமிழில் முதன் முதலில் தோன்றிய காப்பியமாகும். இதனைக் குடிமக்கள் காப்பியம் என அறிஞர் போற்றுவர்.

A) அறிஞர் எதனைப் போற்றுவர்?

B) தமிழில முதன்முதலில் காப்பியம் தோன்றியது?

C) குடி மக்கள் காப்பியம் என்றால் என்ன?

D) தமிழில் குடிமக்கள் காப்பியம் என அறிஞர் போற்றியது எந்த நூல்?

2. ஒருவர் பேசுவதை அவர் பேசியபடியே கூறுவது எவ்வகைத் தொடர்?

A) செய்வினைத் தொடர்

B) பிறவினைத் தொடர்

C) நேர்கூற்றுத் தொடர்

D) அயற்கூற்றுத் தொடர்

3. பின்வருவனவற்றுள் எவ்வாக்கியம் செயப்பாட்டுவினை வாக்கியம் எனச் சுட்டிக் காட்டுக

A) பாவாணர் அரசின் உதவியுடன் சொற்பிறப்பியல் அகர முதலி வெளியிட்டார்

B) அரசின் உதவியுடன் பாவாணரால் சொற்பிறப்பியல் அகர முதலி வெளியிடப்பட்டது.

C) அரசு உதவி செய்ததால் பாவாணர் சொற்பிறப்பியல் அகர முதலி வெளியிட்டார்.

D) சொற்பிறப்பியல் அகர முதலியை பாவாணார் அரசு உதவியுடன் வெளியிட்டார்.

4. தேவர் அனையர் கயவர் அவருந்தாம், மேவன செய்தொ லான். – இக்குறட்பாவில் இடம் பெற்ற அணியைச் சுட்டுக.

A) வஞ்சப்புகழ்ச்சி அணி

B) தற்குறிப்பேற்ற அணி

C) இரட்டுற மொழிதல் அணி

D) பின்வருநிலையணி

5. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் மொத்த எண்ணிக்கை

A) 38  

B) 70

C) 09    

D) 10

6. தமிழக அரசு எந்நாளைத் திருவள்ளுவர் நாளாக அறிவித்துள்ளது?

A) சித்திரை 1  

B) ஆடி 18

C) தை 2          

D) புரட்டாசி 3

7. பொருத்துக

A) இன்மை1. வலிமை

B) திண்மை2. வறுமை

C) ஆழி3. தவம்

D) நோன்மை4. கடல்


A)   4     2      1      3

B)   2     1      4      3

C)   1     3      2      4

D)   3     4      1      2

8. ‘தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்தவன்றே’ – என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

A) சிலப்பதிகாரம்      

B) சீவகசிந்தமாணி

C) கம்பராமாயணம்   

D) மணிமேகலை

9. கம்பராமாயணத்தில் எத்தனை பாடல்களுக்கொரு முறை சடையப்ப வள்ளல் வாழ்த்திப் பாடப்பட்டுள்ளார்?

A) ஆயிரம்    

B) நூறு

C) இருநூறு  

D) ஐம்பது

10. பின்வருவனவற்றுள் சரியானது

i. பதிற்றுப்பத்து என்னும் நூலில் 10 சேர மன்னர்களைப் பற்றி 10 புலவர்கள் பாடியுள்ளனர்.

ii. முதல் பத்தும் எட்டாம் பத்தும் கிட்டவில்லை

iii. முதல் பத்தும் 10 ஆம் பத்தும் கிட்டவில்லை.


A) i கூற்றும் ii கூற்றும் சரியே

B) i கூற்றும் iii கூற்றும் தவறு

C) i கூற்றும் ii கூற்றும் தவறு

D) i கூற்றும் iii கூற்றும் சரியே

No comments:

Post a Comment