PG TRB TAMIL Study Material - 16

1. பேச்சு ஒலிக்குரிய காற்று தடுக்கப்பட்டால் பிறப்பது

  • உயிரொலி
  • மெய்யொலி
  • கேட்பு ஒலி
  • உச்சரிப்பு ஒலி

2. எவ்வகை ஒலிகள் தோன்றும் போது குரல்வளை அதிர்கின்றன.

  • ஆடொலி
  • மருங்கொலி
  • மூக்கொலி
  • உரசொலி

3. வெவ்வேறு சூழலில் வரும் ஒலிகள் தம்முள் ஒலி ஒற்றுமை பெற்றிருந்தால் எவ்வாறு கருதுவர்.

  • மாற்றொலி
  • பௌதீக ஒலி
  • உயிரொலி
  • மெய்யொலி

4. மாற்றொலிகள் எவ்வாறாக வடிவம் பெறுவதில்லை

  • சொல்லாக
  • எழுத்துகளாக
  • மொழியாக
  •  இலக்கணமாக

5. ஒருமொழியில் காணப்படும் சின்னஞ்சிறு கூறுகள் ------------ எனப்படும்.

  • உருபு
  • மாற்றுருபு
  • உருபன்
  • உறழ்ச்சி

6. பேச்சுமொழி ஓடும் ஆறு போன்றது என்றும் எழுத்துமொழி அதில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்றும் கூறியவர்.

  • டாலிராண்ட்
  • யெஸ்பர்ஸன்
  • குண்டர்ட்
  • வெண்ட்ரியே

7. ஒருவர் தாம் கற்றவற்றை கொண்டு மற்றவற்றை அமைத்துக் கொள்ளும் தன்மை

  • போலச்செய்தல்
  • நகல் முறை
  • ஒப்புமையாக்கம்
  • ஏற்றுக்கொள்ளுதல்

8. தமிழில்இடைச்சொற்கள்' சீனமொழியில் ..................

  • கூட்டிணைச் சொற்கள்
  • உரிச்சொற்கள்
  • வெறுஞ் சொற்கள்
  • பெயர்சொற்கள்

9. தமிழ்ச் சொற்கோவை முறைப்படி சொற்களை எத்தனை வகையாக பிரிக்கிறார் மு..

  • 4
  • 3
  • 2
  • 1

10. தமிழுக்கும் வடமொழிக்கும் பொது எழுத்துக்களால் ஆகிய வடச் சொற்கள்.

  • தற்சமம்
  • தனி நிலை
  • தற்பவம்
  • மணிபிரவாளம்

Previous Post Next Post