Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 29, 2024

வைணவ இலக்கியம் வினா விடைகள் - 03

  1. பெரியாழ்வார் எங்கு பிறந்தார்? திருவில்லிப்புத்தூர்
  2. பெரியாழ்வார் எப்போது பிறந்தார்? ஆனி மாத, சுவாதி நாள்
  3. பெரியாழ்வாரின் இயற்பெயர் யாது? விஷ்ணு சித்தர்
  4. பெரியாழ்வாரின் சிறப்புப்பெயர் யாது? பட்டர்பிரான்
  5. பெரியாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 நூற்றாண்டு
  6. பெரியாழ்வார் படைப்புக்கள் யாவை? திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி
  7. கண்ணனைக் குழந்தையாக்கிப் பாடிய, பிள்ளைத் தமிழுக்கு முன்னோடி ஆனவர் யார்? பெரியாழ்வார்
  8. பன்னிரு ஆழ்வார்களில் பெண்பால் ஆழ்வார் யார்? ஆண்டாள்
  9. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் யார்? ஆண்டாள்
  10. ஆண்டாள் பிறந்த நாள் யாது? ஆடி மாத பூர நாள்
  11. ஆண்டாள் யாருடைய அம்சமாகத் தோன்றினாள்? பூமாதேவி
  12. ஆண்டாளின் இயற்பெயர் யாது? கோதை
  13. ஆண்டாளின் சிறப்புப்பெயர் யாது? சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பைங்கொடி, கோதை நாச்சியார்
  14. ஆண்டாளின் நூல்கள் யாவை? திருப்பாவை, நாச்சியார் திருமொழி
  15. ஆண்டாளின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
  16. தொண்டரடிப் பொடியாழ்வார் எங்கு பிறந்தார்? சோழ நாட்டு, திருமண் குடி
  17. தொண்டரடிப் பொடியாழ்வார் என்று பிறந்தார்? மார்கழி மாத கேட்டை நாள்
  18. திருமாலின் வனமாலையின் அம்சமாகப் பிறந்தவர் யார்? தொண்டரடிப் பொடியாழ்வார்
  19. தொண்டரடிப் பொடியாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
  20. தொண்டரடிப் பொடியாழ்வாரின் இயற்பெயர் யாது? விப்ரநாராயணன்
  21. தேவதேவி என்னும் பரத்தையிடம் மனதைப் பறிகொடுத்தவர் யார்? தொண்டரடிப் பொடியாழ்வார்
  22. தொண்டரடிப் பொடியாழ்வாரை சிறை மீட்டவர் யார்? திருவரங்கத்தான்
  23. தொண்டரடிப் பொடியாழ்வாரின் நூல்கள் யாவை? திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
  24. திருப்பள்ளி எழுச்சியில் உள்ள பாடல்கள் எத்தனை? 10
  25. திருமாலையில் உள்ள பாடல்கள் எத்தனை? 45
  26. திருமங்கையாழ்வார் எங்கு பிறந்தார்? சோழ நாட்டுத் திருமங்கையில் திருவாலி திருநகரிக்கு அருகில் உள்ள திருக்குறையலூரில் பிறந்தார்.
  27. திருமங்கையாழ்வார் எப்போது பிறந்தார்? நள ஆண்டு கார்த்திகை மாதம்
  28. திருமங்கையாழ்வார் எதன் அம்சமாகப் பிறந்தார்? திருமாலின் வில்லின் அம்சம்
  29. திருமங்கையாழ்வாரின் சிறப்புப் பெயர்கள் யாவை? நீலன், பரகாலன்
  30. நீலன் எனப்படக் காரணம் யாது? அவரது உடலின் நிறம் நீலமாக இருப்பதால் [அவரது தந்தையின் பெயர் யாது நீலி]
  31. பரகாலன் எனப்படக் காரணம் யாது? திருமங்கையாழ்வார் சோழ மன்னனின் படைத்தலைவனாக இருந்த போது பகைவரை வென்றார். எனவே அவரது வீரத்தைப் போற்றி பரகாலன் எனப்பட்டார் [பின் திருமங்கை நாட்டின் அரசராக்கப்பட்டார்]
  32. திருமங்கையாழ்வாரின் மனைவி பெயர் யாது? குமுதவல்லி
  33. வைணவ அடியாருக்கு உதவ கொள்ளையனாக மாறிய ஆழ்வார் யார்? திருமங்கையாழ்வார்
  34. திருடிய திருமங்கையாழ்வாரை திருத்த திருமால், திருமகள் வந்தனர். அப்போது அவரைத் திருத்திய பின் இறைவன், "ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை உபதேசம் செய்தார்.
  35. நாகை பௌத்த விகாரங்களைக் கொள்ளையடித்து திருவரங்க மூன்றாம் மதிலுக்குத் திருப்பணி செய்தவர் யார்? திருமங்கையாழ்வார்
  36. திருமங்கையாழ்வாரின் படைப்புக்கள் யாவை? பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்
  37. நம்மாழ்வாரின் நான்கு வேதத்திற்கு ஆறு அங்கமாகத் திகழ்வன் யாவை? திருமங்கையாழ்வாரின் ஆறு நூல்கள்
  38. திருமங்கையாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
  39. சங்கம் குறித்துத் திருமங்கையாழ்வார் கூறுவன யாவை? "சங்கமுகத்தமிழ் மாலை", "சங்கமலித்தமிழ் மாலை"
  40. திருப்பாணாழ்வார் எங்கு பிறந்தார்? சோழ நாட்டு உரையூர்
  41. திருப்பாணாழ்வார் எப்போது பிறந்தார்? கார்த்திகை மாத உரோகிணி நாள்
  42. திருப்பாணாழ்வார் பாணர்குடியுல் பிறந்ததால் பாணாழ்வார் என்று அழைக்கப்படுகிறார்
  43. குளத்தைத் தீட்டுப்படுத்தியதாக அந்தனர்களால் தாக்கப்பட்டார் திருப்பாணாழ்வார். அந்த அந்தணர்களின் தவறை உணர்த்த அவரது உடலில் உள்ள இரத்தத்தைத் தன் உடலில் காட்டினர் திருமால்.
  44. திருப்பாணாழ்வாரை அடித்து, பின் திருமால் ஆணையால் அவரைத் தோளில் சுமந்த அந்தணர் தலைவர் யார்? லோகசாரங்கன்
  45. திருப்பாணாழ்வார் பாடிய பாசுரங்கள் - அமலனாதிபிரான் [10 பாசுரம்]
  46. திருப்பாணாழ்வார் காலம் - கி.பி. 9 ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment