உடல்நலம்

PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 15

01.     அணு எண் z கொண்ட ஓர் இலக்கு தனிமதிளிருந்து உமிழப்படும் சிறப்பு X - கதிர் நிறமாலை வரியின் அதிவெண் γ எனில் மோஸ்லே விதியானது?

A.   γ Z

B.   γ √Z

C.   γ 3

D.   γ 2

02.     நேர்க்கடத்தியின் தன் மின்தூண்டல் எண்?

A.   மிக அதிகம்

B.   சுழி

C.   முடிவிலி

D.   மிகவும் சிறியது

03.     வெப்ப மின்னிரட்டையில் குளிர் சந்தியின் வெப்பநிலை -30°C மற்றும் திருப்பு வெப்பநிலை 270°C எனில் புரட்டு வெப்ப நிலையானது?

A.   500° C

B.   570° C

C.   520° C

D.   540° C

04.     உருகு இழை என்பது?

A.   குறைந்த மின்தடை கொண்டது

B.   அதிக மின்தடை கொண்டது

C.   ஈயம், தாமிரம் கொண்ட உலோககக்கலவை

D.   அதிக உருகு நிலை கொண்டது

05.     குறுக்குக்கோட்டு விளைவில் காஸ்மிக் கதிர்களின் செறிவு எந்த கோணத்தைப் பொருத்து பெருமமாக இருக்கும்?

A.   45°

B.   60°

C.  

D.   90°

06.     ரேடியோ பரப்பியில் உள்ள RF அலைவரிசை உருவாக்குவது?

A.   உயர் அதிர்வெண் ஊர்தி அலைகள்

B.   செவியுணர் சைகை மற்றும் உயர் அதிர்வெண் ஊர்தி அலைகள்

C.   குறைந்த அதிர்வெண் உடைய ஊர்தி அலைகள்

D.   செவியுணர் சைகைகள்

07.     குறிப்பிட்ட நீளம் கொண்ட தாமிரக் கம்பியின் மின்தடை R அதன் நீளம் இரு மடங்காக்கப்படும் போது அதன் மின்தடை எண்?

A.   மாறுபடாது

B.   நான்கு மடங்காகும்

C.   நான்கில் ஒரு பங்காகும்

D.   இருமடங்காகும்

08.     ஹைட்ரஜன் குண்டின் தத்துவம்?

A.   அணுக்கரு விசை

B.   அணுக்கரு இணைவு

C.   கார்பன் நைட்ரஜன் சுற்று

D.   அணுக்கரு பிளவு

09.     கூலிட்ஜ் குழாய் ஒன்று 24800 V மின்னழுத்தத்தில் செயல்படுகிறது எனில் தோன்றும் x - கதிர்கள் பெரும அதிர்வெண்?

A.   3 x 10 18 Hz

B.   6 x 10 18 Hz

C.   3 x 10 8 Hz

D.   6 x 10 8 Hz

10.     பெரும அயனியாக்கும் திறனைப் பெற்றுள்ளவை?

A.   γ- கதிர்கள்

B.   நியூட்ரான்கள்

C.   α - துகள்கள்

D.   β - துகள்கள்

0 Response to "PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 15"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups