உடல்நலம்

PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 14

01.     அணுக்கருவினுள் ஒரு புரோட்டானுக்கும் மற்றொரு புரோட்டானுக்கும் இடையே உள்ள அணுக்கரு விசை?

A.   குறுகிய நெடுக்கம் உடையது

B.   சுழி ஆகும்

C.   அதிக நெடுக்கம் விசை ஆகும்

D.   விரட்டு விசை ஆகும்

02.     மின்காந்தத் தூண்டல் பயன்படுத்தப்படாதது?

A.   AC மின்னியற்றி

B.   அறை சூடேற்றி

C.   மின்மாற்றி

D.   அடைப்புச் சுருள்

03.     மின்காந்த அலைகள் இருப்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்தவர்?

A.   ஹை ஜென்ஸ்

B.   ஜேம்ஸ் கிளார்க்

C.   மாக்ஸ்வெல்

D.   ஹெர்ட்ஸ்

04.     ஒரு a.c மின்சுற்றில்?

A.   rms மின்னோட்டத்தின் மதிப்பு மின்னோட்டத்தின் உச்ச மதிப்பை போல √ 2 மடங்கு

B.   மின்னோட்டத்தின் சராசரி மதிப்பு சுழி

C.   மின்னோட்டங்களின் இருமடிச் சராசரி மதிப்பு சுழி

D.   சராசரி திறன் இழப்பு சுழி

05.     ஹென்றி என்ற அலகினை இப்படியும் எழுதலாம்?

A.   Ω s

B.   Vs A-1

C.   Wb A -1

D.   மேற்கண்ட அனைத்தும்

06.     சம மின்னழுத்தப் பரப்பில் உள்ள இரு புள்ளிகளுக்கு இடையே 500 μC மின்னூட்டத்தை நகர்த்த செய்யப்படும் வேலை?

A.   வரம்புள்ள நேர்குறி மதிப்பு

B.   சுழி

C.   வரம்புள்ள எதிர்குறி மதிப்பு

D.   முடிவிலி

07.     ரூதர் போர்டு அணுமாதிரியின்படி அணு ஒன்றின் நிறமாலை?

A.   வரிநிறமாலை

B.   தொடர் நிறமாலை

C.   பட்டை நிறமாலை

D.   தொடர் உட்கவர் நிறமாலை

08.     கீழ்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவு?

A.   மின்புலம்

B.   மின்னழுத்தம்

C.   மின்புலவிசை

D.   இருமுனை திருப்புத்திறன்

09.     தொலை நகலியினால் அனுப்ப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை?

A.   ஒளி மாறுபாடு

B.   பண்பேற்றம்

C.   வரிக்கண்ணோட்டம்

D.   எதிரொளிப்பு

10.     PN சந்தி டையோடில் உருவாகும் திருப்புச் சார்பு தெவிட்டு மின்னோட்டத்திற்கு காரணமாய் அமைவது?

A.   ஏற்பான் அயனிகள்

B.   சிறுபான்மை ஊர்திகள்

C.   பெரும்பான்மை ஊர்திகள்

D.   கொடையாளி அயனிகள்

0 Response to "PG TRB PHYSICS (TM) STUDY MATERIALS - 14"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups